கோப்புப் படம் 
இந்தியா

குஜராத்: பள்ளி சென்ற மாணவி மர்மமான முறையில் மரணம்

பள்ளி சென்ற ஆறு வயது மாணவியின் மர்மமான மரணத்தில் காவல்துறையினர் விசாரணை

DIN

குஜராத்தில் பள்ளி சென்ற ஆறு வயது மாணவியின் மர்மமான மரணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத்தில் பிபாலியா கிராமத்தில் ஆறு வயதுடைய மாணவி ஒருவர் வியாழக்கிழமையில் பள்ளி சென்றுள்ளார். ஆனால், பள்ளி நேரம் முடிந்தும், மாணவி வீட்டுக்கு வரவில்லை.

இதனையடுத்து, பள்ளிக்கு சென்ற சிறுமியின் குடும்பத்தினர், பள்ளி பூட்டப்பட்டிருந்ததால், உள்ளே ஏறி குதித்து, சிறுமியை தேடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கு பின்புறத்தில் சுற்றுச் சுவருக்கு அருகில், ஒன்றரை அடி நீளமே உள்ள இடத்தில் சிறுமி மயக்க நிலையில் இருப்பதைக் கண்டுள்ளனர்.

இருப்பினும், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதிலும், சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட பின்னர், சிறுமியின் மரணத்தை தற்செயலான மரணம் என்று வழக்குப்பதிவு செய்ததுடன், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், சிறுமியின் மரணத்திற்கான முதன்மைக் காரணம் அறிந்ததும், எஃப்.ஐ.ஆர். செய்யப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் ராஜ்தீப்சின் ஜாலா கூறினார். மேலும், பள்ளியைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ஆய்வக மருத்துவ சேவையை மேம்படுத்த விவேகானந்த கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தலைக்கவசம்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு

மேல்விஷாரம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவியேற்பு

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்: தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் டிஆர்பி தளத்தில் வெளியீடு!

SCROLL FOR NEXT