கோப்புப் படம் 
இந்தியா

செவிலியர் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: 4 காவல் அதிகாரி, 2 அரசு அதிகாரி கைது!

6 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ. கோரிக்கை

DIN

மகாராஷ்டிரத்தில் செவிலியர் மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட போக்குவரத்து காவல், மத்திய தொழில்படை, மாநில ரிசர்வ் காவல் அதிகாரி என 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மகாராஷ்டிரத்தில் வசாய் பகுதியில் பணியிலிருந்த 6 காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமையில் விடுப்பு எடுத்திருந்தனர். ஹரிராம் கிதேவும் பிரவீன் ரானடேவும் போக்குவரத்துத் துறை காவல் அதிகாரிகளாக இருந்துள்ளனர். மாதவ் கேந்த்ரே, ஷியாம் கிதே, சாத்வா கேந்த்ரே, சங்கர் கிதே ஆகிய நால்வரில் இருவர் அரசு அதிகாரிகளாகவும், ஒருவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையிலும், ஒருவர் மாநில ரிசர்வ் காவல்துறையிலும் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இவர்கள் ஆறு பேரும் விடுப்பு எடுத்து, கோவாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, வாடகைக்கு கார் ஒன்றை எடுத்து, மது அருந்திவிட்டு கோவாவுக்கு காரில் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், ஜாம்சாண்டே கிராமத்தில் உள்ள மாநில போக்குவரத்து பேருந்து நிலையம் அருகே சென்ற போது, ஹரிராம் காரில் இருந்து இறங்கி, அங்கிருந்த 18 வயது செவிலியர் மாணவியிடம் முகவரி ஒன்றை கேட்டுள்ளார். பின்னர், அந்த சிறுமி விலகிச் சென்றபோதும், அவரை ஹரிராம் பிந்தொடர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, காரில் இருந்த ஐந்து பேரும் வெளியே வந்து, சிறுமியை காருக்குள் வருமாறு மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, சிறுமியின் கையைப் பிடித்து காருக்குள் இழுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.

அந்த சமயத்தில் சிறுமி கூச்சலிட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் ஒன்றுகூடி, அவர்கள் ஆறு பேரையும் தாக்கி, சிறுமியை விடுவித்துள்ளனர். பின்னர், அவர்களை சாலையிலேயே அமரவைத்து, காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தை அடைந்த காவல்துறையினர், அவர்கள் ஆறு பேரையும் கைது செய்தனர். சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், அவர்கள் ஆறு பேர் மீதும் பல்வேறான பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் ஆறு பேரும், காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, தேவ்காட் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஹரிராம் மற்றும் பிரவீன் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், அவர்கள் ஆறு பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க, அவர்கள் பணிபுரியும் துறைகளை வலியுறுத்தும்படி, எம்.எல்.ஏ. நிதேஷ் ரானே காவல்துறையை கோரினார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

SCROLL FOR NEXT