முகப்பு
இந்தியா

11 பேரைக் கொன்ற புலி கூண்டில் அடைக்கப்பட்டது!

மகாராஷ்டிரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 11 பேரைக் கொன்ற புலி கூண்டில் அடைக்கப்பட்டது.

Updated On : 29 செப்டம்பர், 2024 at 7:54 AM
கோப்புப் படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 11 பேரைக் கொன்ற புலி கூண்டில் அடைக்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தின் சந்திரபூர் மாவட்டத்தில் சிச்பள்ளி வனப்பகுதியில் உலவி வந்த பெண் புலி கடந்த 3 ஆண்டுகளில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 11 நபர்களைக் கொன்றுள்ளது.

டி - 83 என்று அழைக்கப்படும் அந்தப் பெண் புலி நேற்று காலை ஜனலா எனும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் சுற்றித் திரிந்தபோது வனத்துறை அதிகாரிகளால் மயக்க மருந்து செலுத்திப் பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டது.

கால்நடை மருத்துவர்கள் மற்றும் பல அதிகாரிகளும் புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக பலமுறை கூண்டுகள் வைத்து பிடிக்க முயற்சி செய்தும் தப்பித்துவந்த இந்தப் புலி 3 ஆண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டிருப்பது மிகவும் நிம்மதியாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.