கோப்புப்படம் 
இந்தியா

நாளை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்!

காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் தொடர்பாக...

DIN

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நாளை(ஏப். 2) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

வார இறுதி விடுமுறை மற்றும் ரமலான் விடுமுறை முடிந்து இன்று (ஏப்ரல் 1) நாடாளுமன்றம் கூடவுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடா் ஏப்ரல் 4-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், வக்ஃப் மசோதா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த வாரத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் நாளை ஆலோசனை நடைபெறுகிறது.

இதையும் படிக்க: வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீா் முகாம்: 55 மனுக்களுக்கு தீா்வு

இளைஞரிடம் கைப்பேசியை பறித்து சென்ற இருவா் கைது

தென்னை மரத்துக்கு ரூ.36,450 இழப்பீடு வழங்கக் கோரிக்கை

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

ஆசனூா் அருகே தனியாா் பேருந்தில் கரும்பு தேடிய யானை

SCROLL FOR NEXT