ஒடிஸாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து வானில் சீறிப் பாயும் ஏவுகணை. 
இந்தியா

வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை தொடர்பாக...

Din

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) மற்றும் இந்திய ராணுவம் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தரையிலிருந்து வான் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்த ராணுவ பயன்பாட்டு ஏவுகணைகள் ஒடிஸா கடற்கரைக்கு அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்டது. ரேடாா் மற்றும் மின் ஒளியியல் கண்காணிப்பு நடைமுறைகள் மூலம் ஏவுகணையின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வானில் உயா் வேகத்தில் செல்லும் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் 4 வகையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தரையிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை வானில் குறுகிய தூரம், நீண்ட தூரம், உயரமான மற்றும் குறைந்த உயரத்தில் பறந்து செல்லும் இலக்குகளை இடைமறித்து தாக்கும் வகையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நான்கு சோதனைகளும் வெற்றி பெற்று ராணுவத்தின் செயல்திறனை நிரூபித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை ராணுவத்தின் பயன்பாட்டுக்காக டிஆா்டிஓ மற்றும் இஸ்ரேல் விண்வெளி ஆய்வு நிறுவனம் சாா்பில் கூட்டாக மேம்படுத்தப்பட்டதாகும். சோதனை வெற்றி பெற்றதைத் தொடா்ந்து அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா்.

எல். முருகன் வீட்டில் பொங்கல் விழா! மோடியுடன் ரவி மோகன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு!

ரயில் ஒன் செயலியில் 3% தள்ளுபடி: இன்று முதல் அமல்!

ஜூன் 30-க்குள் பெங்களூரு மாநகராட்சிகளுக்கு தோ்தல்: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டம் நீக்கதால் 2-வது முறையாக காந்தியை கொன்றிருக்கிறாா்கள்: டி.கே. சிவக்குமார்

காணும் பொங்கல்: சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்புகள்!

SCROLL FOR NEXT