ENS
இந்தியா

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இந்தியா!

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஆசிய நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஆய்வில் தகவல்

DIN

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஆசிய நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் சீனா, வியட்நாம், தாய்லாந்து நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா குறைந்த வரிகொண்ட நாடாக உள்ளது. வெளிநாட்டு முதலீட்டு முடிவுகளை வடிவமைப்பதில் கட்டணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்தியாவின் சராசரி பரஸ்பர கட்டணம் சுமார் 26 சதவிகிதம்; இது 34 சதவிகிகிதம்கொண்ட சீனாவைவிடக் குறைவு. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும், உலகளாவிய முதலீட்டு இடமாக இந்தியா வளர்ச்சியடைவது அதிக கவனத்தைப் பெறுகிறது.

முதலீட்டாளர்களுக்கு சாதகமான சந்தைகளைத் தேடும்போது, செலவு, செயல்திறன், முதலீட்டாளர் நட்பு அணுகுமுறைகளில் இந்தியா சிறப்பு பெறுவதாக முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.

எளிய செயல்பாடுகள், குறைந்த செலவுகள், விரைவான வருமானம் ஆகியவைதான், இந்திய சந்தைகளை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றும் காரணிகளாக உள்ளன.

தொடர்ந்து 15 வாரங்களாக, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறியதால், 1.45 டிரில்லியன் டாலர்வரையில் இழப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாத இறுதியில் தலைகீழான நிலைமையை எதிர்கொண்டது.

அதாவது, கடந்த மாத இறுதியில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மீண்டும் நிகர வாங்குபவர்களாக மாறியது, புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையின் அறிகுறியாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் தேர்தல் பணிக்கு 5 புதிய குழுக்கள் அமைத்தது பாஜக!

ரெட்ட தல ப்ரோமோ வெளியீடு!

8 புதிய போயிங் 737 விமானங்களை இணைத்துக்கொள்ளும் ஸ்பைஸ்ஜெட்!

“அன்னைக்கே உன்ன தட்டிருக்கணும்” மயிலாடுதுறை ஆணவக்கொலை சம்பவம்: பெண்ணின் தாயார் மிரட்டிய விடியோ!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

SCROLL FOR NEXT