இந்தியா

தமிழ்நாட்டுக்கு அதிக நிதி: மதிப்பீட்டின் அடிப்படையில் குறைவே..! -ப.சிதம்பரம் எதிர்வினை

மத்திய அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி

DIN

தமிழ்நாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவிப்பதைப் பார்க்கும்போது, முந்தைய ஆட்சிக் காலத்தைவிட மதிப்பீட்டளவில் இந்த நிதி குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் ப.சிதம்பரம் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டுக்கு 2004-14 காலகட்டத்தைவிட 2014-24 காலகட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகப் பிரதமரும் மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

உதாரணமாக, தமது அரசு, தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்காக முந்தைய அரசுகளைவிட 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதாக பிரதமர் தெரிவிக்கிறார்.

இந்த விவகாரத்தில் நீங்கள், பொருளாதாரத்தில் முதலாமாண்டு பயிலும் மாணவர் ஒருவரிடம் கேட்டுப்பார்ப்பின், அவர் உங்களுக்கு ‘பொருளாதார அளவீடு(எகனாமிக் மெட்ரிக்ஸ்)’ குறித்தும், அதன்படி, பொருளாதார அளவீடானது முந்தைய ஆண்டுகளைவிட அதிகமாகவே இருக்குமென்பதையும் எடுத்துரைப்பார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின்(ஜிடிபி) அளவு முன்பைவிட இப்போது விரிவடைந்துள்ளது

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது ஒவ்வோர் ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டைவிட விரிவடைந்து வருகிறது

அரசின் மொத்த செலவினமும் ஒவ்வோர் ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட விரிவடைகிறது

நீங்களும், முந்தைய ஆண்டைவிஒட ஒரு வயது அதிகமாகிறீர்கள்...

அப்படியிருக்கும்போது, ‘எண்களின்’ அடிப்படையில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு அதிகமாக தெரியலாம்.. ஆனால், ஜிடிபி விகிதத்தின் அடிப்படையில் இந்த நிதி அதிகரித்துள்ளதா?

அல்லது

மொத்த செலவினத்தின் அடிப்படையில் இந்த நிதி அதிகரித்துள்ளதா? என்று வினவியுள்ளார் ப. சிதம்பரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: மாட்டிறைச்சிக்குத் தடை! வங்கி ஊழியர்கள் நூதன போராட்டம்!

லோகா: நல்ல விமர்சனங்களால் கூடுதல் திரைகள் ஒதுக்கீடு!

இந்திய ராணுவத்தில் வேலை: சட்டம் படித்தவர்களுக்கு வாய்ப்பு!

உயிரோவியம்... அனுமோள்!

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசல் பலி! ரூ.25 லட்சம் நிதியுதவி!

SCROLL FOR NEXT