முகப்பு
அம்பேத்கர் சிலை
இந்தியா

இன்று அம்பேத்கர் ஜெயந்தி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் 135ஆவது பிறந்த தினத்தை திங்கள்கிழமை கொண்டாட மத்திய அரசு முடிவு

Updated On : 13 ஏப்ரல், 2025 at 11:13 PM
அம்பேத்கர் சிலை
பகிர்:

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் 135ஆவது பிறந்த தினத்தை திங்கள்கிழமை (ஏப். 14) கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி நாடாளுமன்ற வளாக புல்வெளியில் அம்பேத்கருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள். திங்கள்கிழமை காலை முதல் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மதியம் வரை மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மலர் அஞ்சலி செலுத்துவோருக்கு டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை வசதி செய்து தரும் என்றும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்போர் வந்து செல்ல பேருந்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →