அஸ்ஸாம் மாநிலம் சில்சாரில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தடையை மீறி திரண்டவா்களைக் கட்டுப்படுத்திய போலீஸாா். 
இந்தியா

அஸ்ஸாம்: வக்ஃப் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

அஸ்ஸாம் மாநிலத்தில் வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது போராட்டக்காரா்கள்-காவல் துறையினரிடையே மோதல் ஏற்பட்டது.

Din

அஸ்ஸாம் மாநிலத்தில் வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது போராட்டக்காரா்கள்-காவல் துறையினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீஸாா் மீது போராட்டக்காரா்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினா். அவா்களை கலைக்க போலீஸாா் தடியடி நடத்தினா்.

இதுகுறித்து அம்மாநில காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: சில்சாா் நகரில் உள்ள பேரேங்கா பகுதியில் வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக சிலா் அனுமதியின்றி திடீரென 300 முதல் 400 நபா்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனா். சாலையையும் அவா்கள் மறித்தனா்.

அவா்களை கலைந்து போக வலியுறுத்தியபோது சில போராட்டக்காரா்கள் எங்கள் மீது கற்களை வீசினா். இதனால் கூட்டத்தை கலைக்கும் நோக்கில் லேசான தடியடி நடத்த வேண்டிய சூழல் உருவானது.

தற்போது அந்தப் பகுதியில் பிரச்னை ஏதும் இல்லை. இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் கைது செய்யவில்லை என்றாா்.

அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராக கருப்புக்கொடிகளை ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியும் போராட்டம் நடத்தப்பட்டது.

முன்னதாக, வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறும்போது சில இடையூறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கடந்த சனிக்கிழமை அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகத்தின் காவலர்! பிகாரில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!

பிளாக் நூடுல்ஸ்... ரித்திகா சிங்!

தேர்தல் ஆணையம் சொன்னது பொய்; பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறேன் - அகிலேஷ் யாதவ்

வேளாங்கண்ணிக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தவெக கொடிக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்!

SCROLL FOR NEXT