தாவர்சந்த் கெலாட்  
இந்தியா

அரசுத் துறை ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு! மசோதாவின் நிலை என்ன?

அரசுத் துறை ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கான ஒப்புதல் குறித்து...

DIN

அரசுத் துறை ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு கர்நாடக மாநில அமைச்சரவை அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சியான பாஜக உறுப்பினர்களின் போராட்டங்களுக்கு மத்தியில், கர்நாடகத்தின் இரு அவைகளிலும் அரசுத் துறை ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதலுக்காக மாநில அரசு அனுப்பிவைத்தது. எனினும் இதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறி ஆளுநர் மாநில சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்பிவைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இந்த மசோதாவை மாநில அரசு அனுப்பிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு இந்திய அரசியலமைப்பில் இடமில்லை எனக் கூறி இந்த மசோதாவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சில அடிப்படைவாதிகளுடன் சமாதானம் செய்துகொள்ளும் நோக்கத்தில் இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி கொண்டுவந்துள்ளதாக பாஜக விமர்சித்தது.

இந்நிலையில், ஒப்புதல் பெறுவதற்காக குடியரசுத் தலைவருக்கு இந்த மசோதா அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இதையும் படிக்க | ஹரியாணாவில் அம்பேத்கர் சிலை உடைப்பு! 2 பேர் கைது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் விண்வெளி வீரர் அனுமன்! மாணவர்களுடன் உரையாற்றிய அனுராக் தாக்குர்!

கோவையில் வனத் துறையினரின் வாகனத்தை தாக்கி கண்ணாடியை உடைத்த காட்டு யானை

நொய்டா வரதட்சிணை கொலை: சொகுசு கார், பைக், தங்கம், பணம்.. நீளும் பட்டியல்

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

சென்னையில் போக்குவரத்து எஸ்எஸ்ஐ தற்கொலை!

SCROLL FOR NEXT