FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தில் பிரதமரின் கேள்விநேரம்!

நாடாளுமன்றத்தில் பிரதமரின் கேள்விநேரம் இருக்க வேண்டும் என்று முன்னாள் கூடுதல் செயலாளரின் புத்தகத்தில் கூறியுள்ளார்.

Updated On : 20 ஏப்ரல் 2025, 11:58 am IST
பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

நாடாளுமன்றத்தில் பிரதமரின் கேள்விநேரம் இருக்க வேண்டும் என்று மக்களவை செயலகத்தின் முன்னாள் கூடுதல் செயலாளர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் கூறியுள்ளார்.

இந்தியாவின் முந்தைய ஜனநாயக வரலாறு முதல் அவற்றின் பரிணாம வளர்ச்சி, தற்போதைய மக்களவை வரையில் குறிப்பிட்டு `இந்திய நாடாளுமன்றம்: முந்தைய நாடாளுமன்றம் முதல் தற்போதைய நாடாளுமன்றம் வரை’ (The Indian Parliament: Samvidhan Sadan to Sansad Bhawan) என்ற புத்தகத்தை, மக்களவை செயலகத்தின் முன்னாள் கூடுதல் செயலாளர் தேவேந்தர் சிங் வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்தப் புத்தகத்தில், நாடாளுமன்றத்தில் பிரதமரின் கேள்விநேரம் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

புத்தகத்தில் கூறியதாவது, ``பிரதமரின் கேள்வி நேரத்தின் அறிமுகம், உண்மையில் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கும். வாரத்துக்கு ஒருமுறை பிரதமரின் கேள்வி நேரத்தை அறிமுகப்படுத்துவது, ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்படும்.

இதன்மூலம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவான தீர்வு தேவைப்படும் பிரச்னைகள் பற்றி தெரிவிக்கவும், அரசின் கொள்கைகளை விளக்கவும், விமர்சனங்களை எதிர்கொள்ளவும் பிரதமரை அனுமதிக்கும்.

காலத்துக்கேற்ப, விவாதம் மற்றும் பொறுப்புக் கூறலுக்கான அவையாக இருப்பதற்கும், நாடாளுமன்றத்தின் நடைமுறைகளில் புதுமை இன்றியமையாத ஒன்று. வருடத்துக்கு குறைந்தது 100 நாட்களாவது நாடாளுமன்றம் கூடி, வலுவாக செயல்பட வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments