முகப்பு
இந்தியா

பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது! - விராட் கோலி

பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Updated On : 23 ஏப்ரல், 2025 at 12:45 PM
விராட் கோலி..
பகிர்:

பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல்களையும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்தத் தாக்குதல் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அமைதியும், வலிமையும் கிடைக்க வேண்டும் எனவும் இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ள பதிவில், “பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியானது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நினைத்துக்கூட பார்க்க முடியாத வேதனையை அனுபவித்து வருகின்றனர். இந்த மாதிரியான நேரத்தில் நாம் அவர்களுடன் துணை நிற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.