கீர் கங்கை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ENS
இந்தியா

மேகவெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரகாசி! 4 பேர் பலி..12 பேர் மாயம்!

உத்தரகண்டில் மேகவெடிப்பால் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால், கனமழை பெய்து ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உத்தரகாசி மாவட்டத்தில், இன்று (ஆக.5) திடீரென உண்டான மேகவெடிப்பால் கனமழை பெய்து வருவதால், தாராலி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

கீர் கங்கை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டு அபாயகரமான சூழல் நிலவுவதாகவும், இதுவரை சுமார் 4 பேர் பலியாகியுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தால், சுமார் 20 - 25 தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்டதுடன், 10 - 12 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி மாயமாகியுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, வெளியான விடியோக்களில், திடீரென பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில், கிராம மக்கள் சிக்கியுள்ள பரபரப்பான காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த திடீர் வானிலை மாற்றம் குறித்து தற்போது வரை உரிய விளக்கம் அளிக்கப்படாத நிலையில், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் ராணுவக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

It is reported that many areas in Uttarakhand have been flooded due to heavy rains caused by cloudbursts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையில்லா போகி: ஆட்சியா் கோரிக்கை

ஊராட்சிச் செயலா்களின் தொடா் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு

சமத்துவ பொங்கல் விழா

அம்மன் தாலி செயின் திருடிய இருவா் கைது

விஜய்யிடம் பொங்கலுக்குப் பின் மீண்டும் விசாரணை!

SCROLL FOR NEXT