திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலுக்கு பக்தர் ஒருவர் 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதன் மதிப்பு ரூ.140 கோடி என்றும், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதன் நன்றிக்கடனாக, அவர் இதனைச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்திற்குட்பட்ட மங்களகிரியில் வறுமை ஒழிப்புத் திட்டம் தொடர்பான அரசு நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய அவர், ''சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என திருப்பதியில் வேண்டிக்கொண்ட பக்தர், சுவாமிக்கு தற்போது, 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.140 கோடி. தொழில் தொடங்கி அதில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கான நன்றிக்கடனாக அவர் இதனைக் கோயிலுக்கு அளித்துள்ளார்'' எனக் குறிப்பிட்டார்.
சொந்தமாகத் தொடங்கிய நிறுவனத்தின் 60 சதவிகித பங்குகளை விற்றதன் மூலம் ரூ. 6000 கோடி வரை ஈட்டியதாகவும் இதனைக் கடவுள் கொடுத்ததால், அவருக்கு திருப்பிக் கொடுக்க அந்த பக்தர் முடிவு செய்ததாகவும் முதல்வர் தெரிவித்தார்.
திருப்பதி - திருமலை தேவஸ்தானத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமிக்கு நாள்தோறும் அணிவிக்கப்படும் தங்க அணிகலன்களின் நிறை 120 கிலோ என்பதை அறிந்த பக்தர், ஒரு கிலோ கூடுதலாக 121 கிலோ எடையுடைய தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இதையும் படிக்க | ஆந்திரப் பிரதேசத்துக்கு ரெட் அலர்ட்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.