மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 3 நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று (ஆக.19) ரஷியா செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியா துணைப் பிரதமர் டெனிஸ் மண்டுரோவின் அழைப்பை ஏற்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அரசு முறைப் பயணமாக அந்நாட்டுக்குச் செல்கிறார்.
இந்நிலையில், வரும் ஆக.21 ஆம் தேதி வரையிலான இந்த மூன்று நாள் பயணத்தில், ரஷியா மற்றும் இந்தியா இடையிலான கூட்டுறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வரும் ஆக.20 ஆம் தேதி, மாஸ்கோவில் நடைபெறும், இந்தியா - ரஷியா அரசுகளுக்கு இடையிலான வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆணையத்தின் 26-வது அமர்வில் அவர் கலந்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில், அமைச்சர் ஜெய்சங்கர், ரஷியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜெய் லாவ்ரோவை நேரில் சந்தித்து பேசவுள்ளார்.
சமீபத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், ரஷியாவுக்கு மேற்கொண்ட அரசு முறைப் பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின், துணைப் பிரதமர் மண்டுரோவ் ஆகியோரை நேரில் சந்தித்து உரையாடினார்.
முன்னதாக, ரஷியாவுடன் இந்தியா மேற்கொள்ளும் எண்ணெய் வர்த்தகத்தினால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்க இயந்திரங்கள் மீண்டும் ஏற்றுமதி: சீனா உறுதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.