பிரதிப் படம் ENS
இந்தியா

அமெரிக்காவின் வரிவிதிப்பு! இந்தியாவுக்கு ரூ.4.19 லட்சம் கோடி பாதிப்பு!

அமெரிக்காவின் வரிவிதிப்பால், இந்தியாவில் 48 பில்லியன் டாலர் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவின் வரிவிதிப்பால், இந்தியாவில் 48 பில்லியன் டாலர் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பரஸ்பர வரி மற்றும் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி, இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்கா விதித்தது.

இந்த வரிவிதிப்பு, இம்மாதம் 27 ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மீது 50 சதவிகிதமென்றால், 48.2 பில்லியன் டாலர் வரையில் இந்திய ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சுமார் ரூ. 4.19 லட்சம் கோடி என்று கணிக்கப்பட்ட கணிப்பு, 2024 ஆம் ஆண்டின் இந்தியா - அமெரிக்க வர்த்தகத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த வரிவிதிப்பு அமலுக்கு வருவதற்கு முன்னதாக, பெரும்பாலான இந்திய உற்பத்தி நிறுவனங்கள் தங்களால் முடிந்த வரையில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. இது நிரந்தர தீர்வாக இல்லாவிட்டாலும், அடுத்த சில மாதங்களுக்கு மட்டுமே நிதிப் புழக்கத்தை கொடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதா கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் அறிமுகம்

வி.கே.புரத்தில் அனைத்து சமுதாயப் பேரவைக் கூட்டம்

கழுகுமலையில் இளைஞருக்கு மிரட்டல்: மற்றொரு இளைஞா் கைது

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்பக் கூட்டம்

கோவில்பட்டியில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT