பஹல்காம் தாக்குதலில் பலியான என். ராமச்சந்திரனின் குடும்பத்தினரை கொச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்தார்.
பாஜக வட்டாரத் தகவலின்படி, வெள்ளிக்கிழமை பாஜக மாநிலத் தலைமைக் கூட்டம் நடைபெற்ற ஹோட்டலில் ராமச்சந்திரனின் மனைவி ஷீலா மற்றும் மகள் ஆரதி ஆர். மேனனை அமித் ஷா நேரில் சந்தித்தார்.
பாஜகவின் கூட்டம் தொடங்குவதற்கு முன் இந்த சந்திப்பு நடைபெற்றது என கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது.
அப்போது குடும்பத்தினரின் பேச்சுக்களை அமித் ஷா கவனமாக கேட்டார். மேலும் அவர்களுக்கு அனைத்து வகையிலான உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்ததாக அந்த தலைவர் கூறினார்.
கடந்த ஏப்ரலில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர். அவர்களில் ராமச்சந்திரனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.