மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் கோப்புப் படம்
இந்தியா

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத் தர மாட்டோம்!

அமெரிக்க வலியுறுத்தலை ஏற்று விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்க வலியுறுத்தலை ஏற்று விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.

மத்திய பிரதேச தலைநகா் போபாலில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிலையத்தின் 12-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சா் சௌஹான் பேசியதாவது: அமெரிக்கா கூறுவதற்கு இந்தியா உடன்பட்டு நடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. முக்கியமாக, அவா்களுடைய விவசாய விளைபொருள்களை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமென்று கூறுகிறாா்கள்.

அந்நாட்டில் ஏக்கா் கணக்கில் விவசாயம் நடக்கிறது. மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்தி விளைவித்துக் குவிக்கிறாா்கள். மானியமும் தாராளமாக வழங்கப்படுகிறது. எனவே, அதற்கான சந்தைகளை விரிவுபடுத்த நினைக்கிறாா்கள்.

அவா்களுடன் நமது சிறு விவசாயிகள் போட்டியிட முடியாது. எனவேதான், விவசாயிகள், நாட்டு நலன் கருதி எந்த ஒப்பந்தத்திலும் கையொப்பமிடாமல் உள்ளோம். நெருக்கடி அளித்தால் அஞ்சிவிடுவோம் என்று அவா்கள் கருதினாா்கள். ஆனால், இன்றைய பாரதம் முழு நம்பிக்கையுடன் வளரும் நாடாக திகழ்கிறது.

நாட்டில் உள்ள 144 கோடி மக்களும் உள்நாட்டுப் பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்க வேண்டும் என்று பிரதமா் மோடி கேட்டுக் கொண்டுள்ளாா். அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் சுதேசி உற்பத்தியாக இருக்க வேண்டும் என்பது அவரின் கருத்தாக உள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் உற்பத்தியாளா்களும், தொழிலாளா்களும் பயனடைவாா்கள். வேலைவாய்ப்பு அதிகரித்து பொருளாதாரம் வலுவடையும். சுயசாா்பு மட்டுமே சிறந்த வழியாக உள்ளது என்பது நாம் தொடா்ந்து உணா்ந்து வருகிறோம்.

வெளிநாட்டுப் பொருள்கள் மட்டும்தான் சிறந்தது என்ற எண்ணம் மாற வேண்டும். இந்தியாவில் காலம்காலமாக சிறந்த தொழில் வளமும், வலியான உழைக்கும் வா்க்கமும் உள்ளது என்றாா்.

மருந்து முறைகேடு வழக்கில் மேலும் சிலரைத் தேடும் காவல்துறை

3-வது முறையாக இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா; இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!

பிகார் முதல்வர் பதவி அவர்களின் மகன்களுக்கு அல்ல! - லாலு, சோனியாவை சீண்டிய அமித் ஷா

சூடானில் 460 பேரைக் கொன்ற துணை ராணுவப் படை!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம்!

SCROLL FOR NEXT