பால்காரில் கட்டடம் இடிந்து பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. PTI
இந்தியா

மகாராஷ்டிரம் கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

பால்கர் மாவட்டத்தில் கட்டடம் இடிந்து பலியானோரது எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிரம் மாநிலம் பால்கர் மாவட்டத்தில், 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் பலியானோரது எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

பால்கர் மாவட்டத்தின், விஜய் நகர் பகுதியில் அமைந்திருந்த சுமார் 50 வீடுகளுடன் கூடிய 4 அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டடம், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக.26) நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது.

இதனைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட ஏராளமான படைகள் கட்டட இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஏற்கெனவே, இந்தச் சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியானதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இடிபாடுகளுக்கு இடையில் இருந்து தற்போது 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம், பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், படுகாயமடைந்த 6 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், உரிய அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் அந்தக் கட்டடத்தை கட்டிய நபரை காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஹரியாணாவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித்தொகை!

The death toll from the collapse of a part of a four-storey building in Palghar district of Maharashtra has risen to 17, it has been reported.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தின் முதல் பாடல்!

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி காலமானாா்!

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

SCROLL FOR NEXT