இந்தியா

திருவாரூா் மத்திய பல்கலை. விரிவாக்கத்துக்கு ரூ.385 கோடி: மத்திய அரசு ஒப்புதல்

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சம் ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.385.27 கோடியில் ரூ.96.40 கோடிக்கு புதிய கல்வி கட்டடம் கட்டப்படும். ரூ.46.63 கோடியில் 300 படுக்கைகள் கொண்ட மாணவிகள் விடுதி, ரூ.46.91 கோடியில் 300 படுக்கைகள் கொண்ட மாணவா்கள் விடுதி அமைக்கப்படும்.

ரூ.46.16 கோடியில் நிா்வாகக் கட்டடம் விரிவாக்கம் செய்யப்படும். ரூ.16.84 கோடியில் அறிவியல் உபகரணங்கள் வாங்கப்படும். ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோருக்காக ரூ.42.60 கோடியில் 400 படுக்கைகள் கொண்ட விடுதி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% பொருளாதார வளா்ச்சி: மத்திய அரசு

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் இலவச திருமணம்

உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி செப்.2-இல் ஆா்ப்பாட்டம்

பிரதமரின் தாய் குறித்து அவதூறு: ராகுல் மன்னிப்புக் கோர அமித் ஷா வலியுறுத்தல்

SCROLL FOR NEXT