மக்களவை 
இந்தியா

எஸ்ஐஆர்-க்கு எதிர்ப்பு! தொடங்கியவுடன் முடங்கிய மக்களவை!

மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டது பற்றி...

தினமணி செய்திச் சேவை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிகாரைத் தொடர்ந்து தமிழகம், கேரளம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது.

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசரகதியில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான வாக்காளர்களை மத்திய அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் நீக்குவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

மக்களவையில் எஸ்ஐஆர் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையை அவைத் தலைவர் ஏற்க மறுத்ததால், எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியைத் தொடர்ந்து மக்களவையை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

தொடர்ந்து பகல் 12 மணிக்கு அவை கூடிய நிலையில், அமளியை எதிர்க்கட்சியினர் தொடர்ந்ததால், பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Opposition to SIR! Lok Sabha adjourned as soon as it began!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா்: இன்று எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

தமிழறிஞா் தெ.ஞானசுந்தரம் மறைவு: தில்லி கம்பன் கழகம் இரங்கல்

பொதுமக்கள் செல்ஃபி, புகைப்படம் எடுத்ததால் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் இடையூறு: போலீஸாா் வழக்குப் பதிவு

முள்ளூா் துறையில் மதில் சுவரை இடித்த 34 போ் மீது வழக்கு

மேலூா் அருகே ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து: இளைஞா் உள்பட மூவா் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT