எதிர்க்கட்சிகள் அமளி! ஒரு நிமிடத்தில் முடங்கிய மக்களவை!
எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒரே நிமிடத்தில் முடங்கியது பற்றி...
எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளியில் மக்களவை அலுவல்கள் முடங்கியுள்ளன.
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சீன எல்லைப் பிரச்னை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு மக்களவையில் நன்றி தெரிவித்து பிரதமர் மோடி நேற்று மாலை பேசவிருந்தார்.
ஆனால், எதிர்கட்சிகளின் அமளி காரணமாக மோடி பேசுவதற்கு முன்பே, மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியவுடன் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், சில நொடிகளில் அவையை பகல் 12 வரை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார்.
தொடர்ந்து, பகல் 12 மணிக்கு அவை கூடியவுடன் பதாகைகளை ஏந்தி அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து அவைத் தலைவர் உத்தரவிட்டார்.
Opposition parties create uproar! Lok Sabha adjourned in one minute!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.