எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியைத் தொடர்ந்து மக்களவை இரண்டாவது நாளாக முடங்கியுள்ளது.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. நேற்று காலை கூட்டம் தொடங்கியவுடன் தமிழகம், மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். அதற்கு அவைத் தலைவா் அனுமதி மறுத்தாா்.
இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் முடங்கின. அமளிக்கு இடையே மணிப்பூா் ஜிஎஸ்டி மசோதா மட்டும் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட்டது.
தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியவுடன், எஸ்ஐஆா் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் மீண்டும் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், அவைத் தலைவர் மறுப்பு தெரிவித்ததால், அவையின் மையப் பகுதியில் கூடிய எதிா்க்கட்சி எம்.பி.க்கள், விவாதத்துக்கு அனுமதிக்கக் கோரியும் எஸ்ஐஆா்-க்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடியும் அமளியில் ஈடுபட்டதால், பகல் 12 மணிவரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
பகல் 12 மணிக்கும் அமளி தொடர்ந்ததால், பிற்பகல் 2 மணிக்கு மக்களவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.