சத்தீஸ்கரில், நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையிலான துப்பாக்கிச் சூட்டில் 5 நக்சல்கள் மற்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிஜப்பூரில், கங்காலூர் வனப் பகுதியில் சிறப்பு அதிரடி படையினர், சத்தீஸ்கர் காவல் துறையினர், மத்திய ரிசர்வ் காவல் படையின் கோப்ரா பிரிவினர் ஆகியோர் இணைந்து இன்று (டிச. 3) நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில், 5 நக்சல்கள் மற்றும் ஒரு காவல் துறை அதிகாரி ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தாக்குதலில் மற்றொரு காவல் அதிகாரி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சத்தீஸ்கரில் 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் இதுவரை 268 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்துடன், வரும் 2026 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: எஸ்ஐஆர்! தனது சொந்த கல்லறையைத் தோண்டும் பாஜக: மமதா பானர்ஜி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.