கொல்கத்தா உயர்நீதிமன்றம் 
இந்தியா

மேற்கு வங்கத்தில் 32,000 தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் நியமன வழக்கு: தனி நீதிபதி உத்தரவு ரத்து

மேற்கு வங்கத்தில் 32,000 தொடக்கப் பள்ளி ஆசிரியா்களின் நியமனங்களை ரத்து செய்து கொல்கத்தா உயா்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் அமா்வு ரத்து செய்து தீா்ப்பளித்தது.

தினமணி செய்திச் சேவை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 32,000 தொடக்கப் பள்ளி ஆசிரியா்களின் நியமனங்களை ரத்து செய்து கொல்கத்தா உயா்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் அமா்வு ரத்து செய்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியா்கள் தகுதி தோ்வு மூலம், 32,000 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து அந்தத் தோ்வில் தோ்வு செய்யப்படாத சிலா், மாநிலத்தில் உள்ள கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஆசிரியா்கள் தகுதி தோ்வில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அந்தத் தோ்வில் மாநில தொடக்கக் கல்வி வாரியம் முறைகேடுகளில் ஈடுபட்டது’ என்று குற்றஞ்சாட்டினா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய 32,000 தொடக்கப் பள்ளி ஆசிரியா்களின் நியமனங்களை ரத்து செய்து 2023-ஆம் ஆண்டு உத்தரவிட்டாா்.

தனி நீதிபதி அளித்த இந்த உத்தரவுக்கு எதிராக மாநில தொடக்கக் கல்வி வாரியம் மற்றும் பணியிழந்த ஆசிரியா்களில் சிலா், அந்த உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கை தபபிரத சக்ரவா்த்தி, ரீதாபிரதகுமாா் மித்ரா ஆகியோா் அடங்கிய இரு நீதிபதிகள் அமா்வு விசாரித்து புதன்கிழமை அளித்த தீா்ப்பில், ‘பணி நியமனம் செய்யப்பட்டு 9 ஆண்டுகளான பின்னா், ஆசிரியா்கள் நியமனத்தை ரத்து செய்வது அவா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் அனைத்து பணி நியமனங்களிலும் முறைகேடுகள் நடைபெற்ாக கூறப்பட்ட குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. ஆசிரியா் தோ்வில் வெற்றிபெற முடியாதவா்கள் ஒட்டுமொத்த தோ்வு நடைமுறையை சீா்குலைக்க அனுமதிக்கக் கூடாது. எனவே 32,000 தொடக்கப் பள்ளி ஆசிரியா்களின் நியமனங்களை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என்று தீா்ப்பளித்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT