ஜார்க்கண்ட் மாநிலத்தில், நிலத்தடி சுரங்கத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள 1,000-க்கும் அதிகமான மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தன்பாத் மாவட்டத்தின், கெண்டுவாடி பஸ்தி பகுதியின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள நிலத்தடி சுரங்கங்களில் இருந்து கார்பன் மோனாக்ஸைட் எனும் விஷவாயு கசிந்து, நேற்று (டிச. 3) பெண் ஒருவர் பலியானார்.
இத்துடன், விஷவாயு தாக்கி 12 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், பெண்ணின் மரணத்திற்கான காரணம் குறித்த முழுமையான தகவல் உடற்கூராய்வு சோதனையின் அறிக்கை வெளியான பிறகே தெரிய வரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், விஷவாயு தாக்கம் அதிகமுள்ள ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளில் பிசிசிஎல் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்குள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறக் கூறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன், அவரச ஊர்திகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், பிசிசிஎல் நிறுவனம் உள்ளூர் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: 2009 முதல் அமெரிக்காவில் இருந்து 18,822 இந்தியர்கள் வெளியேற்றம்! 2025-ல் மட்டும் எத்தனை பேர் தெரியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.