பாஜக அரசின் அதிகார நோக்கத்திற்கு கொடுக்கப்பட்ட விலையே இண்டிகோவின் தோல்வியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாட்டின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் கடந்த சில நாள்களாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து, ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதம் எனப் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றது. நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,
"இண்டிகோவின் தோல்வி, பாஜக அரசின் அதிகார நோக்கத்திற்கு கொடுக்கப்பட்ட விலையாகும்.
விமானங்கள் தாமதங்கள், விமான சேவை ரத்து செய்யப்படுவதற்கு சாமானிய இந்தியர்களே விலை கொடுக்கிறார்கள். அதாவது விமான சேவை பாதிப்பால் சாமானிய மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியா ஒவ்வொரு துறையிலும் 'மேட்ச் ஃபிக்சிங்' செய்யாமல் நியாயமான முறையில் போட்டிகளில் ஈடுபடத் தகுதியுள்ளதாகும்" என்று பதிவிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு தான் எழுதிய ஒரு கட்டுரையை மீண்டும் பகிர்ந்து இந்த பதிவை இட்டுள்ளார்.
இதையும் படிக்க | சென்னையில் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து! பயணிகள் நிலையத்துக்குள் நுழையத் தடை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.