தில்லியில் மளிகைக் கடையின் வெளியே ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி தம்பதியினர் பலியாகினர்.
தலைநகர் தில்லியின் திக்ரி கலன் பகுதியில், மளிகைக் கடைக்கு வெளியே சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடையின் உரிமையாளர் வினீத் மற்றும் அவரது மனைவி ரேணு ஆகியோர் பலியாகினர்.
தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்தனர்.
கடை கவுன்டர் பகுதியில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், கவுன்டரைச் சுற்றி தொங்கிக் கொண்டிருந்த பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் தீப்பிடித்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ மற்றும் புகை காரணமாக தம்பதியினர் வெளியே வர முடியவில்லை.
தப்பிக்கும் முயற்சியில், அவர்கள் ஷட்டரை இறக்கினர். ஆனால் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்கள் பலியாகினர். போலீஸார் ஷட்டரை திறந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
குற்றப்பிரிவு மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.