பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கைது 
இந்தியா

பாகிஸ்தானில் பயங்கரவாத சதி முறியடிப்பு: 24 பேர் கைது!

பாகிஸ்தானில் பயங்கரவாத சதி முறியடிப்பு பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 24 பயங்கரவாதிகள் கைது செய்துள்ளதோடு, பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாகப் பஞ்சாப் பயங்கரவாத எதிர்ப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் 364 உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அதில் 24 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த ஆயுதங்கள், வெடிபொருள்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் சட்டவிரோத தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ வெடிபொருட்கள், 24 டெட்டனேட்டர்கள், நான்கு குண்டுகள் மீட்கப்பட்டன.

பயங்கரவாதிகள் வெவ்வேறு நகரங்களில் உள்ள முக்கியமான கட்டடங்களைக் குறிவைக்கத் திட்டமிட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பஞ்சாப் மாநிலம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பஞ்சாப் காவல்துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக மாகாணம் முழுவதும் நீதிபதிகள், நீதிமன்றங்கள் மற்றும் பார்களின் பாதுகாப்பை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Law enforcement agencies have foiled a major terror plot in Pakistan's Punjab province and arrested 24 terrorists, most of whom belong to the banned Tehreek-e-Taliban Pakistan (TTP), police said on Saturday.

இதையும் படிக்க: விமான சேவை பாதிப்பு: 7 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு! மேலும் 2 சிறப்பு ரயில்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூவுக்குள் ஒளிந்திருக்கும் மெல்லிடை மங்கை!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

அமெரிக்காவில் தீ விபத்தில் படுகாயமடைந்த இந்தியப் பெண் பலி!

விடுமுறையிலோ பணிநேரம் முடிந்தோ அலுவலக அழைப்பை ஏற்பது கட்டாயமில்லை: மசோதா தாக்கல்!

கரூர் பலி: சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜரான அரசு மருத்துவர்கள்!

SCROLL FOR NEXT