இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்த ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று சிறப்பான விருந்து வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை புரிந்த புதினுக்கு ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் மாளிகையில், ரஷிய அதிபருக்கு சிறப்பான விருந்து வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பாரம்பரியமிக்க உயர்ந்த சுவையுடைய சைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
அதில், முருங்கை இலை சாறு, சுவையான ரசம், காஷ்மீரி வால்நட் குச்சி டூன் செடின், கார சட்னி - ஜோல் மோமோ என காஷ்மீர் முதல் தமிழகம் வரை மிகவும் பாரம்பரியமான உணவுகள் தேர்வு செய்யப்பட்டு மிகுந்த ருசியுடன் தயாரிக்கப்பட்டு பரிமாற்றப்பட்டுள்ளது.
முக்கிய உணவுகளின் பட்டியலில் ஸஃப்ரானி பனீர் ரோல், பாலக் மேதி மட்டர் கா சாக், தந்தூரி பர்வான் ஆலூ, பருப்பு தட்கா, உலர் பழங்கள், குங்குமப்பூ புலாவ் மற்றும் லச்சா பரந்தா, மகஸ் நான், சதனஜ் ரோட்டி, மிஸ்ஸி ரோட்டி, பிஸ்கய்டி ரோட்டி என இந்திய ரோட்டி வகைகளும் விருந்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
விருந்தின் நிறைவாக, பாதாம் அல்வா,கேசர் - பிஸ்தா குல்ஃபி, பழங்கள் இடம்பெற்றிருந்ததாகவும், இதனுடன் வகை வகையான ஊறுகாய்கள், காய்கறி, பழங்களின் சாலட், பல வகையான பழச்சாறுகளும் பரிமாற்றப்பட்டுள்ளன.
விருந்து மற்றும் இசை நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற விழாவில் பங்கேற்ற புதின் நேற்று இரவு ரஷியா புறப்பட்டுச் சென்றார். அவரை விமான நிலையம் சென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வழியனுப்பி வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.