தில்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பாஜக ஆட்சியின் நடவடிக்கைகள் குறித்து மாநில அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா விளக்கமளித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநில அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, ``கடந்த 10 ஆண்டுகளாக, ஆம் ஆத்மி கட்சியால் உருவாக்கப்பட்ட பிரச்னைகளை நாங்களும் தில்லி மக்களும் எதிர்கொண்டோம். இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கவே ரேகா குப்தா அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
விதிகளை மீறும் எந்தவொரு அரசும் அல்லது தனியார் நிறுவனத்திற்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை, காற்றின் தரம் தொடர்பான 1,750 ஆய்வுகள் நடத்தப்பட்டு, 556 அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 48 கட்டுமான தளங்கள் மூடப்பட்டு, ரூ. 7 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில், சாலை தொடர்பான 230 ஆய்வுகளில் ரூ. 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் (PUCC) என கடந்தாண்டு 4,33,000 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டன. ஆனால், இந்தாண்டில் இருமடங்காக 7,97,000 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, தூசி கட்டுப்பாட்டு மீறல்கள் 536 வழக்குகளிலும், திறந்தவெளியில் எரிப்பு என 633 வழக்குகளிலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: விமான சேவை பாதிப்பு! கட்டணங்களை திருப்பி அனுப்ப மத்திய அரசு கெடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.