வந்தே மாதரத்தை புறக்கணித்ததாக முன்னாள் பிரதமர் நேருவை விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளதாவது,
1940 மார்ச் மாதம் பாகிஸ்தான் தீர்மானத்தை முன்மொழித்தவருடன் 1940-ல் வங்காளத்தில் கூட்டணி அமைத்த இந்திய தலைவர் யார்? அவர்தான் ஷியாமா பிரகாஷ் முகர்ஜி.
2005ஆம் ஆண்டு கராச்சியில் ஜின்னாவை பாராட்டிய தலைவர் யார்? அவர்தான் எல்.கே. அத்வானி.
2009ஆம் ஆண்டு தனது புத்தகத்தில் ஜின்னாவை புகழ்ந்த தலைவர் யார்? அவர்தான் ஜஸ்வந்த் சிங் எனப் பதிவிட்டுள்ளார்.
வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் மக்களவையில் இன்று வந்தே மாதரம் குறித்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், வந்தே மாதரம் பாடலை சமரசம் செய்துகொண்டு முஸ்லிம் லீக் முன் சரணடைந்த முன்பு ஜவஹர்லால் நேரு சரண்டைந்ததாகப் பேசியிருந்தார். அவையில் ராகுல் காந்தி இல்லாததைக் குறிப்பிட்டுப் பேசிய மோடி, வந்தே மாதரத்தை முதலில் நேரு புறக்கணித்ததாகவும், தற்போது ராகுல் புறக்கணித்துள்ளதாகவும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அன்று நேரு, இன்று ராகுல்!! வந்தே மாதரத்தை புறக்கணித்ததாக மோடி விமர்சனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.