கேரள உள்ளாட்சித் தேர்தலில் சசி தரூர் வாக்களித்தார் 
இந்தியா

கேரள உள்ளாட்சித் தேர்தல்: சசி தரூர் வாக்களித்தார்!

கேரள உள்ளாட்சித் தேர்தல் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

கேரளத்தில் இன்று(டிச. 9) உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி 14.5% வாக்குகள் பதிவாகியுள்ளன.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வழுதக்காடு பகுதியில் உள்ள காட்டன் ஹில் பள்ளியில் தனது வாக்கினைச் செலுத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

'திருவனந்தபுரம் கேரளத்தின் தலைநகரம், கடந்த 45 ஆண்டுகளாக தவறான நிர்வாகத்தால் நாம் அவதிப்பட்டு வருகிறோம். மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என்று நாங்கள் நம்புகிறோம். ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் கட்சி இளம் வேட்பாளர்களை முன்னிறுத்தியுள்ளன. ஏனெனில் இங்கு மாற்றம் தேவை. மாற்றம் வர வேண்டும் என்பதற்காக நான் வாக்களிக்க வந்துள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வருகிற டிச. 11 ஆம் தேதி மீதியுள்ள திருச்சூர், மலப்புரம், வயநாடு, பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்கு எண்ணிக்கை டிச. 13 ஆம் தேதி நடைபெறும்.

கேரளத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kerala local body elections: Shashi Tharoor casts his vote

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பம்தான் என் உயிா்: பத்மஸ்ரீ விருது பெறும் கே. பழனிவேல்

பெருந்துறை அருகே விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வால்பாறையில் காட்டுப் பகுதியில் தீ!

தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இல்லை - சி.வி.சண்முகம்

கட்டுமான ஒப்பந்ததாரா் மா்ம மரணம்

SCROLL FOR NEXT