ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்குத் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்து உயர் நீதிமன்ற பதிவாளருக்கு மின்னஞ்சல் வந்தது, அதைத் தொடர்ந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
எச்சரிக்கையைத் தொடர்ந்து மோப்பநாய் படைகள், வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கள் சம்பவ இடத்தை அடைந்தன. நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள், வழக்குரைஞர் அறைகளை விட்டு வெளியேறினர். நீமின்ற வளாகத்தில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். தீவிர தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. இதன் காரணமாக இன்று திட்டமிடப்பட்ட அனைத்து விசாரணைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பலமுறை மிரட்டல்கள் வந்தபோதிலும், இந்த மின்னஞ்சல்களை அனுப்பிய நபரை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை, இது காவல்துறையின் செயல்பாடு குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது.
கடந்த 40 நாள்களில் நான்காவது மிரட்டல்..
கடந்த 40 நாள்களில் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நான்காவது மிரட்டல் இதுவாகும். அக்டோபர் 31 அன்று உயர் நீதிமன்றத்திற்கு முதலில் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. இதேபோன்ற மின்னஞ்சல்கள் டிசம்பர் 5, 8 ஆகிய தேதிகளில் மீண்டும் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும், முழு நீதிமன்ற வளாகமும் காலி செய்யப்பட வேண்டியதாக உள்ளது.
போலி மிரட்டல்கள் தொடர்ந்து வருவது நீதிமன்றத்தின் பாதுகாப்பு அமைப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. வழக்குரைஞர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்கள் குறித்துக் கவலையடைந்து வருகின்றனர். மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல்கள் நீதித்துறை நடவடிக்கைகளைச் சீர்குலைத்து விசாரணைகளைத் தாமதப்படுத்துகின்றன.
இதுபோன்ற சம்பவங்களால் வழக்கு விசாரணைகளில் தாமதத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த நிலைமை பாதுகாப்பு அபாயங்களை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நீதித்துறையின் செயல்திறனையும் மோசமாகப் பாதிக்கிறது.
பாதுகாப்பு நிறுவனங்களின்படி, போலி மின்னஞ்சல்களை அனுப்புபவரை அடையாளம் காண்பது சைபர் செல் பணியாக உள்ளது, மேலும் தொழில்நுட்ப உள்ளீடுகளைப் பயன்படுத்தி விரைவான நடவடிக்கைக்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துதல், நுழைவு ஆய்வுகளை அதிகரித்தல் மற்றும் கண்காணிப்பு அமைப்பை நவீனமயமாக்குதல் ஆகியவற்றையும் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 11 நிமிடத்தில் பேசி முடித்து புறப்பட்ட விஜய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.