எதிர்க்கட்சிகள் 200 முறை அவையை புறக்கணித்து வெளியேறினாலும் நாட்டில் ஒரு உடுருவல்காரர்களைக் கூட அனுமதிக்க முடியாது என வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விவாதத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
ராகுல் காந்தி அவரின் குடும்பத்தை விமர்சித்து நான் பேசியபோது வெளியேறியிருந்தால், தர்க்க ரீதியாக பொருத்தமாக இருந்திருக்கும் என்றும், எஸ்.ஐ.ஆர். குறித்து பேசும்போது வெளியேறியுள்ளார் எனவும் விமர்சித்தார்.
மக்களவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மீதான விவாதம் இன்று (டிச., 10) நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சுக்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது தொடர்ந்து பேசிய அமித் ஷா, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 200 முறை அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தாலும், ஒரு ஊடுருவல்காரர்களுக்கு கூட நாட்டில் இடமில்லை. நாட்டில் ஊடுருவியவர்களை வெளியேற்றுவது குறித்து நான் பேசிக்கொண்டு இருக்கிறேன்.
ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, அவரின் தந்தை (ராஜீவ் காந்தி) மற்றும் சோனியா காந்தி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தேன். அப்போது வெளிநடப்பு செய்திருந்தால் தர்க்க ரீதியாக இருந்திருக்கும். ஊடுருவல்காரர்களுக்காக அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் என்ற எங்கள் கொள்கையில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆனால், ஊடுருவலை இயல்பாக்குவது, அங்கீகாரம் வழங்குவது, தேர்தலின்போது வாக்காளர்கள் ஆக்குவது அவர்கள் கொள்கையாக இருக்கிறது. இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | காங்கிரஸ் கேள்விகளுக்கு அமித் ஷாவிடம் பதில் இல்லை: ராகுல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.