திருவனந்தபுரத்தில் பாஜகவின் வெற்றிக்கு அத்தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற நிலையில், அத்தொகுதி எம்.பி.யும் காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், "கேரளத்தின் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்தான் இன்று அதிக கவனம் பெற்றுள்ளன. இதிலிருந்து மக்களின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.
பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிபெற்ற ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு வாழ்த்துகள். ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். இதுவே, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்.
அதேவேளையில், திருவனந்தபுரத்தில் பாஜகவின் வெற்றியும் வரலாற்றுச் சாதனையே. இடதுசாரியின் 45 ஆண்டுகால ஆட்சியை எதிர்த்து நான் பிரசாரம் செய்தேன். ஆனால், ஆட்சி மாற்றத்தை விரும்பிய மக்கள், பாஜகவுக்கு வாக்களித்தனர்.
காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியாக இருந்தாலும், எனது தொகுதியில் பாஜக கூட்டணியின் வெற்றியாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பையே ஏற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதனிடையே, திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றிபெற்றதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி! பிரதமர் மோடி நன்றி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.