இந்தியா

கேரளம்: ஆளுங்கட்சி தோல்வி! மீசையை இழந்த தொண்டர்!

கேரள உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியால் இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சித் தொண்டர் மீசையை வழித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

கேரளத்தின் பத்தனம்திட்டா உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியால் இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சித் தொண்டர் மீசையை வழித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

கேரளத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அதிக இடங்களில் வெற்றி பெற்றநிலையில், ஆளுங்கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) பெரும் பின்னடைவை பெற்றது.

இதனிடையே, பத்தனம்திட்டாவில் எல்டிஎஃப் வெற்றி பெறவில்லை என்றால், தனது மீசையை வழித்து விடுவதாக அக்கட்சியின் தீவிர தொண்டர் ஒருவர், தேர்தலுக்கு முன்னதாக சவால் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், பத்தனம்திட்டாவில் யுடிஎஃப் வெற்றி பெற்று, எல்டிஎஃப் தோல்வியைச் சந்தித்தது.

இதனால், தான் சொன்னதுபோலவே தனது மீசையை எல்டிஎஃப் தொண்டர் வழித்துக் கொண்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?

Kerala: LDF activist in Pathanamthitta loses bet, shaves off moustache

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

94 வயதில் புதிய திரைப்படத்தை இயக்கும் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்!

மார்ச் 15-ல் தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு: திமுக

உலகம் முழுவதும் உதவித் தொகையுடன் கோடைக்கால சிறப்பு படிப்புகள்!

ஆஸி. ஓபன்: சபலென்காவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய ரைபாகினா!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்!

SCROLL FOR NEXT