ஜோர்டான் புறப்பட்டார் மோடி Photo: X/ Narendra Modi
இந்தியா

ஜோர்டான் புறப்பட்டார் மோடி!

பிரதமர் மோடியின் 4 நாள் வெளிநாட்டுப் பயணம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, ஜோா்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு 4 நாள் பயணமாக இன்று காலை புறப்பட்டுச் சென்றார்.

பயணத்தின் முதலில் ஜோா்டான் மன்னா் அப்துல்லா பின் அல் ஹுசைன் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்குச் செல்கிறாா்.

இரு நாடுகள் இடையே ராஜீய உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்தப் பயணத்தை மேற்கொள்கிறாா். இரு தரப்பு உறவை மேம்படுத்தும் பல்வேறு முக்கிய முடிவுகள் பிரதமா் மோடி - ஜோா்டான் மன்னா் சந்திப்பில் மேற்கொள்ளப்பட இருக்கிறாா்.

அதைத் தொடா்ந்து 16-ஆம் தேதி எத்தியோப்பியா சென்று அந்நாட்டு பிரதமா் அபியு அகமது அலி உள்ளிட்ட தலைவா்களைச் சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்துப் பேசுகிறாா். பிரதமா் எத்தியோப்பியா செல்வது இதுவே முதல்முறையாகும்.

பயணத்தின் இறுதியாக 17-ஆம் தேதி ஓமன் செல்லும் பிரதமா், அந்நாட்டு சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை சந்தித்து இருதரப்பு பொருளாதாரம், வா்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்துப் பேச இருக்கிறாா்.

பிரதமரின் இந்தப் பயணம் மூலம் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவின் உறவு மேலும் வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prime Minister Narendra Modi departed from Delhi: four-day trip to Jordan, Ethiopia, and Oman.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் தாமதமாவது ஏன்? டிரம்ப் பதில்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு! வெள்ளி கிலோ ரூ. 55,000 குறைவு!!

ஆம்ஸ்ட்ராங் பிறந்த நாள்: பெரம்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

ஸ்ரீரங்கம் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT