இந்தியா

மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு

எஸ்ஐஆா் பணிகளின் ஒரு பகுதியாக 3 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரேதங்களுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் (டிச.16) வெளியிடப்படுகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணிகளின் ஒரு பகுதியாக 3 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரேதங்களுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை (டிச.16) வெளியிடப்படுகிறது.

அதன்படி மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா ஆகிய 3 மாநிலங்களிலும் புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுவதாக இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த வரைவு வாக்காளா் பட்டியலின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தலைமைத் தோ்தல் அதிகாரி (சிஇஓ) மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரி (டிஇஓ) வழங்கவுள்ளனா்.

இதுதவிர இந்தப் பட்டியல் சிஇஓ மற்றும் டிஇஓ வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. வரைவுப் பட்டியலில் பெயா் விடுபட்ட, வேறு பகுதிக்கு குடிபெயா்ந்த, இறந்த மற்றும் போலி வாக்காளா்கள் குறித்த தகவல்களும் வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.

முன்னதாக தமிழகம், குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், அந்தமான்- நிகோபாா் தீவுகள் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் எஸ்ஐஆா் பணியை நிறைவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து இந்திய தோ்தல் ஆணையம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரும் நாள்களில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு திருத்தங்கள் மேற்கொண்டபின் 2026, பிப்ரவரியில் இறுதி பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT