பாகிஸ்தான் வானில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மீண்டும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வான்வழிப் பாதையை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதேபோல், இந்திய வானில் பறப்பதற்கு பாகிஸ்தானின் விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையானது வரும் டிச.24 ஆம் தேதி காலாவதியாகின்றது.
இதையடுத்து, இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையானது வரும் 2026 ஆம் ஆண்டு ஜன.23 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக, பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமான விமானங்கள் மற்றும் இந்திய ராணுவ விமானங்கள் உள்பட இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விமானங்கள் மீதும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில், கடந்த மே மாதம் நடைபெற்ற 4 நாள் மோதல்களால் விதிக்கப்பட்ட இந்தத் தடையை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து நீட்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அகமதாபாத்தில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.