லாரன்ஸ் பிஷ்னோயின் முன்னாள் உதவியாளர் பாரி கொலை வழக்கில் தில்லி காவல்துறை ஐந்து பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் முன்னாள் உதவியாளர் இந்தர்பிரீத் சிங் என்ற பாரி டிசம்பர் 1 ஆம் தேதி செக்டார் 26ல் கிளப்பிலிருந்து வெளியேறிய சிறிது நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் அவர் தனது எஸ்யூவி காரில் அமர்ந்திருந்தபோது, துப்பாக்கி வைத்திருந்த மர்ம நபர் ஒருவர் அவரை மிக அருகிலிருந்து சுட்டுவிட்டு, தனது கூட்டாளிகளுடன் தப்பிச் சென்றார். பாரி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தக் கொலைக்குக் கும்பல் மோதலே காரணம் என காவல்துறை சந்தேகித்தது. பாரி முன்பு பிஷ்னோய் கும்பலுடன் தொடர்பில் இருந்தார். ஆனால் கனடாவைச் சேர்ந்த தாதா கோல்டி என்பவருக்கு விசுவாசியாக இருந்ததாக நம்பப்பட்டது.
பாரி கொலை நடந்த சிறிது நேரத்திலேயே, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சமூக ஊடகப் பதிவு மூலம் பொறுப்பேற்றது. துபையில் தங்கள் நிதியாளரைக் கொன்றதற்குப் பழிவாங்குவதற்காக இந்தக் கொலை செய்யப்பட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது.
காவல்துறையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாக இருந்தனர் மற்றும் பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர் முழுவதும் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில், தேசிய அளவிலான கபடி வீரர் சோனு நோல்டா, பார் மற்றும் உணவக உரிமையாளர் ஆஷு மகாஜன் ஆகியோரின் கொலையைச் செயல்படுத்தியவர்களும் அடங்குவர் என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.