பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியுடன் சச்சின் சந்திப்பு Instagram/indianblindcricketteam
இந்தியா

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியுடன் சச்சின் சந்திப்பு!

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினரை சச்சின் டெண்டுல்கர் சந்தித்துள்ளார்...

இணையதளச் செய்திப் பிரிவு

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினரை, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்துள்ளார்.

இலங்கையில், கடந்த நவ.23 ஆம் தேதி நடைபெற்ற பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் நேபாள அணியை வீழ்த்தி இந்திய அணியினர் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

இந்த நிலையில், மும்பையில் உள்ள எம்.ஐ.ஜி. கிரிக்கெட் கிளப்பில் இன்று (டிச. 17) உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியினருடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில், பல்வேறு தடைகளைக் கடந்து அவர்களின் கனவுகளுக்காக உழைத்த இந்திய வீராங்கணைகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவிப்பதாக, சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வீராங்கணைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சச்சின் டெண்டுல்கருக்கு, தாங்கள் கையொப்பமிட்ட கிரிக்கெட் மட்டையை இந்திய அணியினர் பரிசளித்துள்ளனர்.

இதையும் படிக்க: சத்தீஸ்கரில் மூத்த தலைவர்கள் உள்பட 11 மாவோயிஸ்டுகள் சரண்!

Sachin Tendulkar has met with the Indian team that won the Women's T20 World Cup for the visually impaired.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்குவாஷ் உலகக் கோப்பையை முதல்முறை வென்று சாதனை! இந்திய அணிக்குப் பாராட்டு!

மீண்டும் எலான் மஸ்க்! 600 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் முதல் நபர்!

"அண்ணாமலை பற்றி பதில்சொல்ல நேரமில்லை!" செங்கோட்டையன் பேட்டி

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

குடியரசு துணைத் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சந்திப்பு!

SCROLL FOR NEXT