உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷிய ராணுவத்தில், 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷிய ராணுவத்தில் பணியாற்ற இந்தியர்கள் சட்டவிரோதமாகச் சேர்க்கப்படுகிறார்களா? என்று திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சாகேத் கோகலே மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்விக்கு, இன்று (டிச. 18) பதிலளித்த மத்திய வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷிய ராணுவத்தில் மொத்தம் 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
“மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் ரஷிய ராணுவத்தில் இருந்து 119 இந்தியர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர். மேலும், சுமார் 50 இந்தியர்கள் விடுவிக்கப்பட காத்திருகின்றனர்.
இந்தப் போரில், 26 இந்தியர்கள் கொல்லப்பட்டதுடன், 7 பேர் மாயமாகியுள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட 10 இந்திய வீரர்களின் உடல்கள் தூதரக அதிகாரிகளின் முயற்சியால் தாயகம் கொண்டு வரப்பட்டன.” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.