ஆந்திரத்தில் மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஏற்கெனவே மது அருந்திய 17 வயது சிறுவன், மதுபானக் கடை அருகே டாட்டாஜி (49) என்ற நபரிடம் மதுபானம் வாங்க பணம் கேட்டுள்ளார்.
மது வாங்க ரூ.10 தர மறுத்ததால், அந்த நபரை சிறுவன் கொன்றதாக போலீஸ் அதிகாரி ஒருவர் பிடிஐ-க்கு தெரிவித்தார்.
இருவரும் ஒருவரையொருவர் முன்பின் அறியாதவர்கள் என்பதால், டாட்டாஜி பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில், சிறுவனை டாட்டாஜி தாக்கியதாக கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, அந்த சிறுவன் கத்தியை எடுத்து, மதுபானக் கடையிலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் அவரை குத்தியதாக போலீஸ் கூறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.