மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் :
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) நடைபெறும் நிலையில், பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 உள்ளாட்சி தொகுதிகளுக்கும் (242 நகராட்சி கவுன்சில்களுக்கும் 46 நகர பஞ்சாயத்துகளுக்கும்) டிச. 2 மற்றும் டிச. 20 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பல இடங்களில் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிட்டனர்.
எதிர்க்கட்சிக் கூட்டணியான மகா விகாஸ் அகாதி கூட்டணியிலும்ள காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸும் சில இடங்களில் ஒருவரை எதிர்த்து ஒருவர் நட்புரீதியாகப் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தனிப்பெரும் கட்சியாக பாஜக 129 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பேசிய அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், வளர்ச்சிக் கண்ணோட்டத்துடன் செயல்படும் அரசின் செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி இது என்று தெரிவித்துள்ளார்.இதனை விமர்சித்து எதிர்க்கட்சிக் கூட்டணியான மகா விகாஸ் அகாடி தரப்பிலிருந்து குறிப்பிடும்போது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்து மகாயுதி கூட்டணியிலுள்ள கட்சிகள் வெற்றி பெற்றிருப்பதக மகா விகாஸ் அகாடி விமர்சித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.