வங்கதேசத்தில் இந்தியாவுக்கும், இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்கள் கவலை அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் மாயாவதி கவலை தெரிவித்தார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
சமீப நாள்களாக வங்கதேசத்தில் இந்தியாவுக்கும், இந்துக்களுக்கும் எதிரான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.
அண்டை நாடான வங்கதேசத்தில் உள்ள இந்து சிறுபான்மையினர் வகுப்புவாத வன்முறைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர். வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினரின் வாழ்க்கை, சொத்து மற்றும் மதம் ஆகியவற்றைக் குறிவைத்து அவர்கள் துன்புறுத்தப்படும் விதம் நமது நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் சமீபத்தில் தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்டு, தலித் இளைஞர் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு எதிராக இந்தியா முழுவதும் தெருக்களில் வெடித்துள்ள பொதுமக்களின் கோபம் இயல்பானது.
மத்திய அரசு இதை உடனடியாக உரியக் கவனம் செலுத்தி, அனைத்து நிலைகளிலும் தீவிர பங்களிப்பை வகிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காலத்தின் தேவையாக உள்ளது.
இந்தியாவில் தலித்துகள், பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள், ஒடுக்குமுறைகள் மற்றும் பாகுபாடுகள் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தாலும், வங்கதேசத்தில் நிலைமையின் தீவிரம் சற்றும் குறையவில்லை.
நமது நாட்டில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான சாதி அடிப்படையிலான வெறுப்பு, ஒடுக்குமுறை, சுரண்டல் தொடர்வதாலும், வங்கதேசத்தில் இழைக்கப்படும் அட்டூழியங்களும் மிகவும் கவலையளிக்கிறது.
இந்த விவகாரத்தில் பொதுமக்களின் ஆதரவு அரசுக்கு இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், மத்திய அரசு இதற்கு உரியக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.