2025 ஆம் ஆண்டில் 81 நாடுகளிலிருந்து 24,600 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் குடியேறியும், பணியாற்றியும் வருகின்றனர். இருப்பினும், சில காரணங்களால் வெளிநாடுகளிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில், 2025-ல் சௌதி அரேபியாவில்தான் அதிகளவிலான இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2025-ல் சௌதி அரேபியாவிலிருந்து 11,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு, முதலிடத்தில் உள்ளது.
தொடர்ந்து, இரண்டாம் இடத்தில் அமெரிக்காவிலிருந்து 3,800 வெளியேற்றப்பட்டனர். இது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை.
இதனைத் தொடர்ந்து, மியான்மரிலிருந்து 1,591 பேரும், மலேசியாவிலிருந்து 1,485 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 1,469 பேரும், தாய்லாந்தில் இருந்து 481 பேர், கம்போடியாவில் இருந்து 305 பேர் மற்றும் பிரிட்டனில் இருந்து 170 மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத குடியேற்றம், விசா விதிமீறல், முறையான ஆவணங்கள் இல்லாமை, இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தங்கள் நாட்டில் தலைமறைவானவர்கள் உள்ளிட்ட காரணங்களுக்காகவே பெரும்பாலும் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, அமெரிக்காவில் டிரம்ப் அரசின் கடுமையான குடியேற்றக் கட்டுப்பாடுகளினாலும் இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.