கைது 
இந்தியா

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினர் கைது

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

DIN

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறி நான்கு பெண்கள் உள்பட ஏழு வங்கதேசத்தினர் மும்பையில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சோஹாங் ஆஷிர் முல்லா (26), ஜாஹிதுல் இஸ்லாம் இமுல் (26), நோயம் அப்சல் ஹுசைன் ஷேக் (25), அலமின் ஷேக் (23), சுமா ஜாஹிகிர் ஆலம் துதுல் (24), தவ்மினா அக்தர் ராஜு (35), சல்மா மொக்சத் அலி (35) ஆகியோர் செம்பூரில் உள்ள மஹுலில் ஐந்து ஆண்டுகளாக தங்கியிருந்ததாக கூறியுள்ளனர்.

மணப்பாறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஈபிஎஸ் கண்டனம்

கைதான 7 பேரும் வங்கதேசத்தினர் என்றும் மார்ச் 2020 முதல் முறையான ஆவணங்கள் இன்றி வசிப்பதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT