தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் பாஜக 44 இடங்களிலும் ஆம் ஆத்மி 25 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், ஆம் ஆத்மி கட்சி 4-ஆவது முறையாக ஆட்சி அமைக்குமா? அல்லது 27 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் பாஜக ஆட்சி அமைக்குமா என்பதை தோ்தல் முடிவுகள் தீா்மானிக்கவிருக்கிறது.
முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரத்திலிருந்தே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆட்சியமைக்க தேவையான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
அதாவது தில்லி பேரவைக்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றிபெற்றால் ஆட்சியமைக்க முடியும். தற்போது பாஜக 44 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
அதேவேளையில் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி, 32 இடங்களில் முன்னிலையில் இருந்தநிலையில் தற்போது பின்னடைவை சந்தித்து 25 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.