கோப்புப்படம்.  
இந்தியா

ரேபரேலி அருகே ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிப்பு

ரேபரேலி அருகே ரயில்வே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்களை லோகோ பைலட் முன்கூட்டியே அறிந்ததால் ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது.

DIN

ரேபரேலி அருகே ரயில்வே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்களை லோகோ பைலட் முன்கூட்டியே அறிந்ததால் ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் இருந்து யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை இரவு புறட்டு சென்றபோது சம்பா தேவி கோயில் அருகே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருப்பதை லோகோ பைலட் கண்டறிந்தார்.

சிவப்பு சமிக்ஞை காரணமாக ரயில் ஏற்கெனவே மெதுவாகச் சென்றதால், அவர் சரியான நேரத்தில் அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார்.

இதனால் ரயிலை கவிழ்க்க நடந்த சதி தக்க சமயத்தில் முறியடிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் உள்ளூர் காவல்துறை மற்றும் ரயில்வே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கோயிலுக்கு அருகில் உள்ள பாலத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் ரயில் தண்டவாளத்தில் பெரிய கற்களை வைத்துள்ளனர் என்றனர்.

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்

கற்களில் ஒரு பெரிய துண்டு, தோராயமாக ஒரு அடி அளவு கொண்ட கல்லுடன் பல சிறிய கற்களும் இருந்தன. நாங்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தோம். பின்னர் உள்ளூர் கோட்வாலி போலீஸில் புகார் செய்தோம் என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.

தண்டவாளத்தில் கற்ககள் வைத்தவர்களை கண்டறிய போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

வாகன விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளி 42-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

திண்டுக்கல், பழனியில்  நாளை மின்தடை

SCROLL FOR NEXT